ஞாயிறு, 5 ஜூலை, 2020

வெற்றிக்கான இரகசிய சாவி உனக்குள்ளே | Tamil Motivation | EPIC LIFE

பகுதி 1

வெற்றி என்றால் என்ன?
" நீங்கள் எதை அடைய வேண்டும் என்று முடிவு செய்கிறீர்களோ அதை அடைந்தால் அதற்குப் பெயர் வெற்றி."



முயற்சி எனும் காரணத்தினால் விளைந்த விளைவே வெற்றி.

பொதுவாக வெற்றி என்பது ஒன்றே ஒன்றுதான் நீங்கள் அதைப் பலவேராக பிரித்துப் பார்க்கலாம்.

பொருளாதார வெற்றி, ஆரோக்கியத்தில் வெற்றி, சமூக அந்தஸ்தில் வெற்றி என்று வெற்றியை நீங்கள் பலவிதமாக பார்க்கலாம், ஆனால் பொதுவில் வெற்றி என்பது ஒன்றே ஒன்றுதான்.

வெற்றிக்கான காரணங்களே வெற்றியைத் தருகிறது அதன்படி எந்த ஒரு செயலும் நோக்கமும் எண்ணமும் வெற்றி மனப்பான்மை உடையதாக இருந்தால் அது வெற்றியை தரும்.

எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் உண்டு அதேபோல வெற்றி எனும் நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு.

ஒரு தனிமனிதன் வெற்றியடைவதற்கான காரணம் அவனுக்குள்ளே தான் இருக்கிறது. அதாவது ஒரு தனி மனிதன்தான் அவனுடைய வெற்றிக்கு முழுமுதற் காரணம்.

வெற்றிக்கான காரணம் வெளியே இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நகரமோ இடமோ அல்லது வேறு ஒரு நபரோ வெற்றிக்கு காரணமாய் இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த குறிப்பிட்ட நகரத்தில் வாழும் அனைவரும் வெற்றியாளர்களாகத்தான் இருக்க முடியும் ஆனால் அப்படி இருப்பதில்லை, இதிலிருந்து ஒன்று புரிகிறது, வெற்றி என்பது ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே.

ஒரு மரம் விதையினால்  முளைப்பிக்கப்படுகிறது. அதுபோல எந்த ஒரு வெற்றியும் ஒரு காரணத்தினால் உருவாக்கப்படுகிறது அந்த விசேஷ காரணமே வெற்றிக்கான விதை.


வெற்றிக்கான அந்தக் காரணம்தான் என்ன?
உங்களுடைய வெற்றிக்கு நீங்கள் மட்டுமே காரணம்.

உங்களுக்குள் இருக்கும் அந்த வெற்றிக்கான காரணத்தை கண்டறிந்து, அதன் வலிமையை அதிகப்படுத்தி உங்களுடைய செயல்களில் வெற்றிக்கான அந்தக் காரணம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நிச்சயம் உங்களுக்கு வெற்றிதான்.

தோல்விக்கான காரணம் என்ன?
ஒரு மனிதனுடைய முயற்சியில் வெற்றி எனும் மரத்தின் விதை இல்லாமல் இருப்பதுதான் தோல்விக்கான காரணம்.

வெற்றிக்கான அந்த விசேஷ காரணம் உங்களுக்குள் இருக்கும் ஒரு ஆற்றல் தான் அந்த ஆற்றல் தான் உங்கள் மனதின் சக்தி.
இந்த ஆற்றலை கொண்டு எவ்வித சக்தியையும் உங்களால் உருவாக்கிடவும் முடியும் அதைச் சிறந்த முறையில் பயன்படுத்திடவும் முடியும்.

நீங்கள் வெற்றியடைய உங்களுக்குள் இருக்கும் அந்த விசேஷ ஆற்றலைக் குறித்து அறிந்து கொள்வதும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளவும் வேண்டும், அவ்வளவுதான்.

திறமை எனும் வெற்றியின் திறவுகோல்

உங்களுடைய திறமைகளை உங்களுடைய செயல்கள் அனைத்திலும் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் பயன்படுத்தவேண்டும்.
திறமைகள் இல்லாத வெற்றியாளர்களை உங்களால் பார்த்திருக்க முடியாது.

இசை ஞானத்தை பெற்றிராத ஒரு கலைஞனை உங்களால் பார்த்திருக்க முடியாது.
ஆன்மீக ஞானமும் பேச்சாற்றலும் இல்லாத ஒரு ஆன்மீகப் பேச்சாளரை உங்களால் பார்த்திருக்க முடியாது.

ஒரு வெற்றியாளனை உருவாக்குவது திறமை மட்டுமல்ல திறமையை போன்று இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன இவை அனைத்தும் ஒரு மனிதனுக்கு உள்ளேயே இருக்கிறது.

தொடரும் ...




7 கருத்துகள்:

  1. ஒரு வெற்றியாளனை உருவாக்குவது திறமை மட்டுமல்ல திறமையை போன்று இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன இவை அனைத்தும் ஒரு மனிதனுக்கு உள்ளேயே இருக்கிறது... Romba happy ah irukum unga blogs eh read pannumbothu elllaaaaaam.. Than you Kumar sir

    பதிலளிநீக்கு
  2. எனக்குள் இருக்கும் வெற்றிக்கான சாவியைக் கண்டுபிடித்து நானும் ஒரு நாள் வெற்றியாளனாக மாறுவேன் அண்ணா நன்றி

    பதிலளிநீக்கு
  3. எனது வெற்றிக்கு தடையாக இருப்பது எனது தைரியமின்மயே.how can I overcome it.

    பதிலளிநீக்கு
  4. Sir வணக்கம் கடந்த சில மாதங்களாக தங்களதுchannelயை பார்த்து வருகிறேன் மிகுந்த நன்றியை தெரிவித்துகெள்கிறேன் சிந்தனை என்றால் என்ன சிந்தனையின் முக்கியதுவத்தையும் மனத்தின் சக்தியையும் எண்ணங்களின் வலிமையையும் செயலின் விளைவுகளையும் தெரிந்துகொண்டேன் தெடர்ந்து இதுபோன்ற இதற்கு மேலான பதிவுகளை கொடுத்து நாளைய தொழில்முனைவோர்களையும் வெற்றியாளர்களையும் உருவாக காரணமான உங்களுக்கும் உங்கள் epic life channel.க்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் 💐🌸💐

    பதிலளிநீக்கு